மன ஆராய்வு

உலகின் அணுகுமுறை உனக்குள்

உன்னை ஆராய தூண்டும்.

மன அலைகள் அலைமோதும்

உற்று நோக்கும் தருணத்தில்,

எதை தேடுகிறோம் என்கிற அறியாமையால்,

எண்ணங்கள் நிலையற்று தடுமாறும்.

உன்னுள் காண்பாய் முறண்பாடுகள்,

போராட்டங்கள் ,தோல்விகள்.

தெளிவடையும் நிலையில், மனதில் ஓர்

ஏகாந்த நிம்மதி ,மகிழ்ச்சி.

விடை தெளியும் பல விடுகதைகள்

உன்னை நீயே அறிந்து கொள்வாய்.

செயல்கள் பலமுறை காரணமாகும்

எதிர்நோக்கும் நிகழ்வுகளுக்கு,

மனநிலை எபபொழுதும் அளவுகோலாகும்,

நம்மைச் சுற்றி நடப்பவைகளுக்கு.

தவறு எப்போதும் மற்றவர்களிடம் இல்லை

நாம் நாமே காரணமாவோம்.

சிந்தித்து ,ஆராய்ந்து செயல்படுவோமெனில்

தடை செய்யலாம் பல இன்னல்களை,

துயரங்களை ,பிரிவுகளை, துக்கங்களை.

இனம் பிரண்டு

வாழ்வே பல்கலைகழகம்!

  பாடம் புகட்டும் தோல்விகள் வாழ்வில்,

காண விழைபவன் இனம் கண்டு கொள்வான்,

  ஒவ்வொருவரும் அற்புத படைப்பு என்று. 

நடவடிக்கை எல்லாம் ஒன்றாக இருந்தால்,

  வேற்றுமைகள் தான் மலருமா?

   அழகாய் தான் இருக்குமா?

சந்தர்ப்பங்கள் வேறு ,மனித மனம் வேறு

   அனுபவத்தின் நாழிகையில்,

அவனைச் சூழும் மனிதர்கள் வேறு,

அவனுள் ஏற்படும் மாற்றங்கள் வேறுதானே?

   அவ்வாரெனின் எதிர்பார்ப்பு ஏன்?

காலத்தின் கட்டாயமா!

மனிதர்களின் வற்புறுத்தலா!

முரண்பட்டு காணப்படும் அவனின்

  மன அழுத்தங்களை,எதிர்பார்ப்புகளை,

   ஆசாபாசங்களை,ஏக்கங்களை

இனம்கண்டு கொள்ள நம்மால் ஏன் இயலவில்லை?

ஆட்டு மந்தைகள் ஆகிவிட்டோமோ,

   எல்லோரும் போன்று ஒன்றாய் சிந்தித்து?

மாற்றங்களை தேடி அலைகிறது இவ்வுலகம்

  தனித்துவம் மிக்க சிந்தனை

இவ்வய்யத்தை ஈர்ந்திழுக்கும்.

எகக்காளம் பேசிய அதே உலகம் 

  அவனை புகழாரம் சூட்டி வரவேற்கும்.

வலகி நில் ,இனம் கண்டு கொள்

  உதவி கரம் நீட்டு

தோல்விகளை தழுவுவாய் சிலவருடங்கள்,

  தளராமல் முயல்

வெற்றி கிட்டும் தருணம்

    ஈடு இணையற்றது!

 

வெளிச்சம்

வெளிச்சம்

நம்பிக்கையின் பிரதிபலிப்பு,

சந்தோஷத்தின் பிரகடனம்,

தீயச்செயல்களின் கல்லறை,

அழுக்குகளை அடையாளம் காட்டும்,

மன இருளையும் சேர்த்து அகற்றும்.

 

விளக்கேற்றும் சம்பிரதாயம்,

முன்னோர்களின் சிந்தனையின் பயன்பாடு

நம்மைச் சுற்றி இருள் அகற்றி

மனதளவில் நம்பிக்கை ஏற்படுத்த.

இயற்க்கை இருண்டால் என்ன?

என்னால் செயற்கையாக வெளிச்சம் பரப்ப இயலும் என்று.

 

விழித்தெழு இளைஞனே! நம்பிக்கை கொள்!

வாழ்வின் துயரங்களை வேரறுக்க இயலும் என்று!

மனித வாழ்வு குறிக்கோள் நிறைந்தது!

விடாது தேடு! வெற்றி காண்!

படைப்பின் அர்த்தத்தை புரிந்து கொள்!

வெற்றி படியேறுவாய்! வானை தொடுவாய்!

 

 

 

அழுகை

அழுகை

துயரம் மேலோங்கும் போது

பொங்கி எழும் உணர்வு

பிறருக்கு நம் உணர்வை

வெளிபடுத்தும் ஆள்காட்டி

 

அவ்வுணர்வு இல்லை எனில்

எங்ஙனம் வெளிக்காட்டும்

பச்சிளம் குழந்தை தன் பசியை, தன் தேவையை.

 

சந்தர்ப்பங்கள் பல,

இயலாமையின் வெளிப்பாடு,

வெற்றியின் ஆர்பரிப்பு

தோல்வியின் விரக்தி

துயரத்தின் உச்சகட்ட வடிகால்.

 

அதன்பின் கிடைக்கும் நிலையோ!

மன அமைதி, ஆறுதல்,

மன இறுக்கத்தின் தளர்ச்சி,

அடைத்த தொண்டை திறந்த நிம்மதி,

பாலைவனத்தில் நிழல் கிடைத்த ஆசுவாசம்,

காற்றற்ற கோடையில் தென்றலின் வருடல்.

இந்த ஏகாந்த நிலைக்கு ஈடு இணையில்லை

இவ்வுலகில் ஓர் உணர்வு.

 

உணர்வில் அடிப்பட்டு, இதயத்தில் பாரமாகி,

கண்களில் நீர்கோர்த்து, வழிந்தோடும் போது,

கொண்டு செல்லும், உன் துயர்ங்களை, உன் துக்கங்களை.

அழகு

CAM01540

அழகு

பார்க்கும் பார்வையில், ரசிக்கும் எண்ணத்தில்,

மனதை கவர்ந்து, ஈர்ந்திழுக்கும் வினோத உணர்வு.

 

சூரிய வெளிச்சத்தின் மஞ்சள் நிறம் மங்களகரம்,

இருளில் நிலவொளியின் வெண்மை ரம்மியம்,

பாலைவனதில் மணல்களின் தனிமை ஏகாந்தம்,

மலைகளில் பாறைகளின் எழுச்சி பிரம்மாண்டம்,

சலசலக்கும் அருவிகளின் தளிர்நடை நளினம்,

வனங்களில் செடிகொடிகளின் வளர்ச்சி கம்பீரம்,

இதழ் விரித்து மணம்கமழும் மலர்களின் புன்னகை ஆனந்தம்,

சிறகடித்து பறக்கும் வண்ணபட்சிகளின் வடிவம் கலைநயம்,

 

இத்துணை அழகையும் ரசிக்கும் மனிதனோ,

அறிவில் மேன்மை அடைகிறான்,

நடத்தையில் தெளிவடைகிறான்,

காட்சியில் ஒன்றிவிடுகிறான்,

ரசிக்கும் அழகை பிரதிபலிக்கிறான்.

Inபாரதியும் இன்றைய பெண்குலங்களும்

Subramanya_Bharathi

பாரதியும் இன்றைய பெண்குலங்களும்

பெண்ணே விழித்தெழு!

பாரதியின் இந்த அறைகூவல்

 பெண்களின் காதில் தவறாக விழுந்ததோ?

அறியாமையை அழித்தொழி

     என்றானே தவிர

குடும்பங்களை அல்ல!

சுதந்திரமாக யோசி

     என்றான் நம் கவி

நாமோ சுதந்திரம் என்ற பெயரில்

     வாழ்க்கையை துலைக்கிறோம்!

வீட்டிற்குள் பூட்டி வைக்கும் மடமையை

     கொளுத்த கூறினான்

நாமோ சிறு ஊடல்களை கூட

     பெரிதாக்கி வீரிட்டு எழுந்து,

வீட்டை விட்டெ வெளியேறி

     நம் குழந்தைகளின் வாழ்வை

           நிலைகுலையச்செய்கிறோம்!

கற்ற பெண் குடும்பத்தை நன்றாக

     நடத்திச் செல்வாள் என்று

கனவு கண்டானே நம் தேசிய கவி!

சுயமாக ஈட்டும் இன்றைய மங்கை

     குடும்பச் சுவரை எட்டி உதைத்து

சுயமாக தன்னை பற்றி மட்டுமே

     சிந்திக்கிறாள் என்றறிந்தால்…..

பெண்களின் வளர்ச்சியை கண்டு

     மகிழ்வானா? இல்லை

சீரழிந்த குடும்பங்களின் அவலங்களை

     பார்த்து மனமுறுகுவானா?

இதில் சிக்கித் தவிக்கும்

     குழந்தைகளுக்கு வேண்டுமானால்

குரல் கொடுப்பான் நம் புரட்சி கவி!!!

மாற்றங்கள்

மாற்றங்கள்

காலங்கள் கடந்து செல்ல செல்ல

ஏற்படும் மாற்றங்கள் மெல்ல மெல்ல!

நம்மை சுற்றி மாற்றம்!

சூழ்நிலைகளில் மாற்றம்!

காலங்களின் மாற்றம்!

உறவுகளில் மாற்றம்!

இவை எல்லாவற்றிலும் மட்டும் தானா

மாற்றம், நம் ஒவ்வொருவரிலும் தான்!

தாய்தந்தை உறவு இன்றியமையாதது, என்றும்

இதில் மட்டும் விதிவிலக்கா என்ன இன்றும்!

என் முப்பாட்டன் காலத்தில்,

தந்தை உரையாடியது இல்லை தனையனிடத்தில்,

தாய் தான் எல்லாமுமானாள்.

என் பாட்டன் காலத்திலோ,

தந்தை உரையாடினார் ஆனால் மறைமுகமாக,

தாய் ஆனாள் பாலமாக.

என் தந்தை காலம்,

தந்தை தனயன் இடையில் இருந்தது சுவர்,

தாயின் மூலம் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

என் காலமோ பொற்க்காலம்,

தந்தை தனையன் பரஸ்பரம் கருத்துக்களை

பரிமாரிககொண்டனர்,

தாய் அதனை பார்த்து பூரித்து மகிழ்ந்தாள்.

என் பிள்ளைகளின் காலத்தில் இன்னும் மாற்றம்,

தந்தைக்கு உபதேசம் செய்கிறான் தனயன்,

தாய் தன் வளர்ச்சியில் காட்டுக்கிறாள் ஈடுபாடு.

என் பேரன் காலங்களில் இன்னும்

எண்ணற்ற மாற்றங்கள் ஏற்படவிழையும்!!!

வியப்புறும் மாற்றங்கள் இந்த உறவில் உண்டு எனில்,

மாற்றங்களை பற்றி கேட்கவா வேண்டும்!

நான் ஏன் எழுதுகிறேன்

மனதில் ஏறும் பாறத்தை இறக்கிவைக்கும் யுத்தி,

அலைகடல் போன்ற எண்ணங்களை பதிவு செய்யும் களம்,

ரசித்தவைகளின் அலசல், நிகழ்வுகளின் ஆய்வு,

இக்கலவைகளின் கதம்பம் தான் இந்த பதிவெடு